ஆவடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்: இன்று நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருவேற்காடு லயன் டி.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்பி ஆகியோரின் உத்தரவின்பேரில் ஆவடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் இன்று (28ம்  தேதி) காலை 10 மணியளவில் திருவேற்காடு நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட, மாநகர, பேரூர்,  வார்டு, கிளை நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>