கே.வி.குப்பம் அருகே மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்-முதலிடம் பிடித்த காளைக்கு ₹75 ஆயிரம் பரிசு

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அருகே நடந்த மாடு விடும் விழாவில் முதலிடம் பிடித்த காளைக்கு ₹75 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

கே.வி.குப்பம் அடுத்த வேலம்பட்டு பகுதியில் 55ம் ஆண்டு மாடு விடும் விழா நடந்தது. ஆர்.டி.ஓ ேஷக் மன்சூர் தலைமையில் விழாக்குழுவினர் உறுதி மொழி ஏற்றப்பின்னர் விழா தொடங்கியது. விழாவில், கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின் காளைகள் பங்கேற்று ஓட அனுமதிக்கப்பட்டன. விழாவில், 125க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.

அதில், எல்லைக்கோட்டை குறைந்த நிமிடத்தில் கடந்த காளைக்கு முதல் பரிசாக ₹75 ஆயிரம் வழங்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் எதிர்பாராதவிதமாக காளைகள் முட்டியதில் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

Related Stories: