கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்

டனர்.2ம் நாளான நேற்று மன்னார்குடி டெப்போவில் இருந்து 64 பஸ்களில் 15 பஸ்கள் மட்டுமே தற்காலிக பணியாளர்களை கொண்டு இயக்கப்பட்டது. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி பணிமனை முன் தொமுச மத்திய சங்க இணை செயலாளர் முருகானந்தம், சிஐடியூ மத்திய சங்க துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஏஐடியூசி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில், தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜராஜன், பெருமாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டபோக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கிளை முன் இரண்டாவது நாளாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் எம்எல்ஏ ஆடலரசன், தொமுச மத்திய சங்க பிரசார செயலாளர் செல்வராஜ், சிஐடியூ கிளை செயலாளர் மதியழகன், ஏஐடியூசி கிளை செயலாளர் வேதேஸ்வரன், எல்பிஎப் கிளை செயலாளர் அருணகிரி மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: