அனல் மின்நிலைய, மின் விநியோக ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: மதிமுக வேண்டுகோள்

சென்னை: மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச்செயளாளர் சு.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மின்வாரிய அனல்மின் நிலையங்களான தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல், மின்வினியோக வட்டங்களில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்படாத கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களும், அதற்குப் பின்பாக தற்போது பணியாற்றி வரும் 4 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்கள் என மின்வாரியத்தின் பணி நிரந்தரத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். எனவே தமிழக அரசும், மின்வாரியமும் அனல்மின் நிலையங்கள் மற்றும் மின் வினியோக வட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் என 9000 பேரையும் பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைளை காலம் தாழ்த்தாது உடனடியாக எடுத்திட வேண்டும் என கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

>