நெருஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில் ஆகாயத்தாமரைகளைஅகற்ற கோரிக்கை

இடைப்பாடி : மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை ஆகிய நீர்மின் கதவணை வழியாக பவானி, திருச்சி, தஞ்சாவூர் வழியாக டெல்டா பாசனத்திற்கு செல்கிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்கு மட்டும் 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

தற்போது தண்ணீர் குறைவாக உள்ளதால், தண்ணீரோடு ஆகாயத்தாமரை அடித்து வரப்பட்டு கதவணை முழுவதும் படர்ந்துள்ளது. இதனால் பரிசல் ஓட்டிகளும், மீனவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே, நெருஞ்சிப்பேட்டை கதவணை முழுவதும் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டும் என மீனவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: