நடுவானில் விமானம் தீப்பற்றிய நிகழ்வு!: அமெரிக்கா, ஜப்பானை தொடர்ந்து எகிப்து நாட்டிலும் போயிங் 777 ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்..!!

கெய்ரோ: அமெரிக்காவில் நடுவானில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகளில் போயிங் 777 ரக விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது எகிப்திலும் போயிங் 777 ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டெனவன் நகரில் இருந்து ஹொனோலோவுக்கு 231 பயணிகளுடன் சென்ற போயிங் 777 ரக விமானம் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுவானில் தீப்பிடித்து எரிந்து தீவிபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. என்ஜின் பாகங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தன.

இந்த நிலையில் விமானிகள் சாமர்த்தியமான முறையில் அணுகுமுறையால் டெனவர் விமான நிலையத்துக்கு விமானம் திருப்பப்பட்டு பயணிகளின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இன்றி பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, போயிங் 777 விமானங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது. அதன்படி அமெரிக்காவில் உள்ள அனைத்து போயிங் 777 விமானங்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை அடுத்து ஜப்பான், தென்கொரியா நாடுகளும் போயிங் 777 சேவையை நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில் எகிப்திலும் தற்போது தனது 4 போயிங் 777 ரக விமான சேவையை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.  உலகம் முழுவதும் உள்ள பிராட் மற்றும் விட்னி பி.டபுள்யூ 4000 சீரீஸ் என்ஜின்களுடன் கூடிய போயிங் 777 ரக விமான சேவையை நிறுத்தி வைக்குமாறு போயிங் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: