கல்லலை கைவிட்ட அமைச்சர்

சிவகங்கை தொகுதியைச் சேர்ந்தவர், தமிழக காதித்துறை அமைச்சர் பாஸ்கரன். இவர் தனக்கு அதிக வாக்குகள் தந்த கல்லல் பகுதிக்கு எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடம் ஓங்கி ஒலிக்கிறது. சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 21 ஊராட்சிகளில் மட்டுமே, 41 ஆயிரத்துக்கும் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.  அமைச்சர் பாஸ்கரன் வெற்றிக்கு இப்பகுதியின் வாக்குகள் பெரிதும் கைகொடுத்தன. ஆனால், இப்பகுதி வளர்ச்சிக்கென அமைச்சராக இருந்தும் இவர் எதுவுமே செய்யவில்லை. 44 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கல்லல் வரவேண்டும். இங்கு பஸ் ஸ்டாண்டு, அரசு சார்பில் நிரந்தர வாரச்சந்தை, அருகாமை செம்பனூரில் ஆரம்பசுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக உயர்த்துவது என எதுவும் நிறைவேற்றவில்லை. கல்லூரிக்கு 25 கி.மீட்டர் செல்ல வேண்டி இருப்பதால் ஒரு அரசு கல்லூரி திட்டம் வாக்குறுதியாகவே இருக்கிறது. இதனால் மக்கள் கொதித்து போயிருக்கின்றனர்.

Related Stories: