தேர்தல் பார்வையாளர்களின் பெயரை கேட்டாலே அலறும் தாசில்தார்கள்: லட்சக்கணக்கில் கைகாசு போட்ட பரிதாபம்

நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில்  தொகுதி வாரியாக வெளிமாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரு தொகுதியில் நடந்தது. அந்த தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக வடமாநிலத்தை சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டு இருந்தார். அவரிடன் ஆட்டத்தை பார்த்து மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் அலறிவிட்டனர். அதாவது, ஸ்டார் ஹோட்டலில் தான் தங்கினார். பிறகு வேலூரில் இங்கிருந்து கார் மூலம் சென்னைக்கு சென்றார். தொடர்ந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். இதற்கிடையில் அங்கிருந்து அதே காரில் மதுரை விமான நிலையத்திற்கு சென்றார். இதையடுத்து குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார். பின்னர் அங்கிருந்து கொச்சி போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றார்.

பின்னர் மீண்டும் அந்த கார் மதுரையில் இருந்து வேலூருக்கு காலியாக டிரைவர் ஓட்டி வந்தார். அதிகாரி ஆட்டம் போட்டதற்கான இத்தனை செலவும் அந்த தொகுதியின் தாசில்தாராக இருந்தவர் தான் செய்தாராம். கைகாசு போட்டு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் நடந்த சம்பவம் எல்லாம் தெரிவித்துள்ளார். எல்லாத்துக்கும் பில் ரெடி பண்ணி வைத்துக் கொள்ளுங்க, தேர்தல் ஆணையத்திடம் சொல்லி கிளைன்ட் பண்ணிக்கொள்ளலாம் என்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.ஆனால் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.இதனால் தாசில்தார்கள் தேர்தல் பார்வையாளர்களின் பெயர்களை கேட்டாலே அலறுகின்றனர்.

Related Stories: