பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் வேளாண் சீர்த்திருத்தத்திற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு

புதுடெல்லி: விவசாய துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்துக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாஜ ேதசிய நிர்வாகிகள் கூடடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த ஒரு சில மாதங்களில் மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முதல் வாரத்தில் பிரதமர் மோடியின் 4 மாநில சுற்றுப்பயணத்துக்கு பாஜ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பிரசாரங்கள், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பாஜவின் செல்வாக்கை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கும் வகையில் பாஜ தேசிய நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இதனை தொடர்ந்து முதல் முறையாக நேற்று இந்த கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான அரசியல் வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜ துணைத் தலைவர் ராமன் சிங் கூறுகையில், ”வேளாண் துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தது, கொரோனா நோய் தொற்றை சிறப்பாக கையாண்டது உள்ளிட்டவற்றுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கொரோனா நோய் தொற்றின்போது பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியது, விரிவான பட்ஜெட், எல்லையில் உண்மையான கட்டுப்பாடு கோடு பகுதியில் சீனாவுடன ஏற்பட்டுள்ள பிரச்னையை விடா முயற்சியுடன் கையாளுதல் உள்ளிட்டவற்றுக்காகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது” என்றார்.

* நாடு தான் முக்கியம்

பாஜ பொதுச் செயலாளர் பூபேந்திர சிங் யாதவ் கூறுகையில், ‘‘நாட்டிற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதே கட்சியின் குறிக்கோள் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார். எனவே, நாடுதான் முதலில் என்ற கட்சியின் கொள்கைக்கைப்படி அனைத்து நிர்வாகிகளும் உழைக்க வேண்டுமென அவர் அறிவுரை கூறினார்’’ என்றார்.

Related Stories: