கவர்னர் கிரண்பேடி மாற்றம்..! கண்ணீர் விட்டு அழுத காவல் துறை பெண் அதிகாரி: வைரலாகும் புகைப்படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கவர்னராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டதால் புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில், வட மாநிலத்தை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்ணீர் விட்டு அழுத புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. புதுவையில் கடந்த 2016ம் ஆண்டில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற நிலையில், கவர்னராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட நாள் முதல் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் மோதல் நீடித்தது. இதனால் மக்கள் நல திட்டங்கள் முடக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் பேசும் அதிகாரிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, வடமாநில அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெருமை உடைய கலெக்டர் அருணை மாற்றி தனது சொந்த மாநிலத்தை சேர்ந்த பூர்வா கார்க்கை கலெக்டராக கிரண்பேடி நியமித்தார்.

இதனால் புதுவை முழுக்க கிரண்பேடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. கலெக்டர், அரசு செயலர் என தொடர்ந்த மாற்றல் நடவடிக்கை காவல் துறையிலும் நிகழ்ந்தது. கிழக்கு பகுதி எஸ்பியாக இருந்த மாறன் மாற்றப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு வடமாநில எஸ்பி ரக்சனாசிங் நியமிக்கப்பட்டார். இதனால் கவர்னர் கிரண்பேடி வடமாநில அதிகாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்தன. இதனிடையே பாஜக பிரபலங்களே கிரண்பேடி மீது தலைமையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அதிரடியாக அவர் நீக்கம் செய்யப்பட்டு, தமிழிசை சவுந்தர்ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் புதுவை மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை சந்திக்க சென்ற கிழக்கு பகுதி எஸ்பி ரக்சனா சிங் கண்ணீர் விட்டு அழுது தனது ராஜ விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Related Stories: