ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தமிழர்களின் கோரிக்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்: தவாக தலைவர் வேல்முருகன் வேண்டுகோள்

சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46வது கூட்ட தொடர் ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இதில், இலங்கையில் தமிழின அழிப்பு போர் குறித்த அறிக்கை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டபோது, பேரினவாத அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியில், ஐ.நா கூட்டத்தொடரில் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று இந்திய அரசிடம், சிங்கள  அரசு கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மோடி அரசு எடுக்கக் கூடாது என்றும், இனப்படுகொலை தொடர்பான குற்ற விசாரணை பன்னாட்டு அரங்கில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். ஐ.நா. மேற்பார்வையில் தனி ஈழம் தொடர்பான கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கையை, ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: