நாட்றம்பள்ளியில் நடந்த மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்-4 பேர் படுகாயம்

நாட்றம்பள்ளி :  நாட்றம்பள்ளியில் நடந்த மாடு விடும் விழாவில் 4 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் மாடு விடும் விழா நேற்று நடந்தது. இதில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், போட்டியில் அனுமதித்தனர். ஒவ்வோறு காளையும் 2 சுற்றுகள் ஓடின. அதில், குறிப்பிட்ட தூரத்தை குறைந்த  நேரத்தில்  ஓடிய ஆந்திரா மாநிலம் மல்லானூர் காளைக்கு முதல் பரிசு ₹1,11,111 உட்பட  55 பரிசுகள்  வழங்கப்பட்டது.

விழாவில் எதிர்பாரதவிதமாக காளைகள் முட்டியதில் 4 பேர்  படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 20 பேர் காயமடைந்தனர். ரசிகர்களை  கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

5 பைக்குகள் திருட்டு:நாட்றம்பள்ளியில் நடந்த மாடு விடும் விழாவிற்கு சுற்றுப்புற பகுதிகளில் இருந்த பார்வையாளர்கள் பலர் பைக்கில் வந்தனர். இவர்கள் பைக்குகளை விழா நடந்த இடத்திற்கு அருகில் விட்டிவிட்டு விழாவை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். விழா முடிந்து பைக்கை எடுக்க வந்தபோது பார்வையாளர்கள் 5 பேரின் பைக் காணவில்லையாம். யாரோ மர்ம ஆசாமிகள் இவர்களது பைக்குகள் எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் நாட்றம்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் பைக்கை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: