தொகுதிக்கு வெளியே இருப்பவர்கள் தபாலில் ஓட்டு போடலாமா? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி:  தங்களின் தொகுதிக்கு வெளியே தங்கி இருப்பவர்கள், தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிப்பது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சத்தியன் என்பவர் புதிதாக பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், ‘தேர்தல் நேரத்தின் போது தங்களின் தொகுதிக்கு வெளியே தங்கியிருக்கும் மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். இவ்ரகள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.  இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இது என்ன மனு? நீங்கள் இங்கிலாந்தில் அமர்ந்து கொண்டு இங்கே வாக்களிக்க முடியுமா? தேர்தலுக்காக உங்களின் தொகுதிக்கு செல்வதற்கு நீங்கள் அக்கறை காட்ட முடியாதபோது, சட்டம் ஏன் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும்?,’’ என்று கேள்வி கேட்டனர். இருப்பினும், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கும், தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories: