2 எம்எல்ஏவாவது கிடைப்பாங்களா? எப்படி இருந்த தேமுதிக... இப்படி ஆயிட்டுச்சே!

கேப்டன் விஜயகாந்த் என்றால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பறந்து பறந்து பந்தாடுபவர். அரசியல்வாதிகளை தட்டி கேட்கும் நல்ல காவல் துறை அதிகாரி, எந்த சூழலிலும் தவறுக்கு துணை போகாதவர், அனைவருக்கும் உதவுபவர் என திரைப்படங்களில் பார்த்து பார்த்து நம் மக்கள் பழகிவிட்டார்கள். அவர் கட்சி தொடங்கியதுமே மக்கள் ஆதரவு அளிக்க தொடங்கினார்கள். அவருக்கு கிடைத்த வாக்கு வங்கி தேமுதிகவுக்கு பலமாக அமைந்தது. அடுத்த தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவரானார். அப்போது ஜெயலலிதாவின் மக்கள் விரோத செயல்பாடுகளை விஜயகாந்த் விமர்சித்தார். இதனால் பேரவையில் ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் மோதினார்.

இதனால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி உடைந்தது. மீண்டும் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைமையில் 3வது அணியை உருவாக்கினார். அப்போதைய தேர்தலில் கடுமையாக தோல்வி அடைந்தார். அதன் பின்பு 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். இதிலும் விஜயகாந்திற்கு சறுக்கல். இதையடுத்து, அதிமுக கூட்டணியில் இணைந்து 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால் அதிலும் தேமுதிகவுக்கு பெருத்த அடிதான் கிடைத்தது. இதுபோன்ற தொடர் தோல்விகளால் தேமுதிகவுக்கான வாக்கு வங்கியும் கடுமையாக சரிந்து விட்டது. வரும் தேர்தலில் தேமுதிக நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம், கடந்த தேர்தலை போல் டக் அவுட் ஆனாலும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். குறைந்தது இரண்டு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டுமாம். 

Related Stories: