இன்று சிவ ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது மாசிமகப் பெருவிழா: பக்தர்களுக்கு அனுமதி

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசிமகப் பெருவிழா இன்று சிவ ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை வைணவ ஆலயங்களில் கொடியேற்றம் நடைபெறுகிறது . வருகின்ற 21.02 .21 ஞாயிற்றுக்கிழமையன்று இரவு சிவ ஆலயங்களில் ஓலைசப்பரத்தில் ரிஷபவாகன காட்சியும், வைணவ ஆலயங்களில் ஓலைசப்பரத்தில் கருடவாகன காட்சியும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. வருகின்ற 24.02 .21 புதன்கிழமை காலை அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26.02.21 வெள்ளிக்கிழமை மாசிமகம் காலை சக்கரபாணி திருக்கோயில் தேரோட்டம் நடைபெறும்.

 

நண்பகல் 12.30 மணிக்கு மகாமககுளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.  சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயிலில் பொற்றாமரை குளத்தில் தெப்பத்திருவிழா காலை, மாலை இரு வேலையும் நடைபெறும். மகாமக குளத்தில் மாலை 06.00 மணிக்கு ஆரத்திப்பெருவிழா நடைபெறும். தேரோட்டம், தீர்தவாரி, தெப்பம், ஆரத்தி வைபவம் அனைத்திலும் பங்கேற்கும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Related Stories: