மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கு.: நிகிதாவிற்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை: இந்திய அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டது தொடர்பான வழக்கில் சுற்றுச்சுழல் செயற்பாட்டாளர் நிகிதாவிற்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தைத் தூண்டும் கருத்துரு உருவாக்கிய குற்றச்சாட்டில், நிகிதா ஜேக்கப்பைப் பிடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஏற்கெனவே பெங்களூரைச் சேர்ந்த திசா ரவியை டெல்லிக் காவல்துறை கைது செய்துள்ளது. அதே வழக்கில் மும்பையைச் சேர்ந்த நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகியோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இருவரும் போராட்டக் கருத்துருவை உருவாக்கியதாகவும், காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினருடன் நேரடித் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகிதா ஜேக்கப், உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்  நிகிதா ஜேக்கப்-க்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நிகிதா ஜேக்கப்புக்கு இந்த முன்ஜாமீனை 3 வாரங்களுக்கு வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: