சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் கைதான 22 பேர் ஆஜர்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, சிறுமியின் வாழ்க்கையை அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் என பலர் சீரழித்தது தெரியவந்தது. இந்நிலையில், சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவரது உறவினர் ஷகிதா பானு, பாஜ பிரமுகர் ராஜேந்திரன், எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, ரயில்வே ஊழியர் காமேஷ்வரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர், 22 பேரை கடந்த நவம்பர் 21ம் தேதி கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கில், போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இன்ஸ்பெக்டர், பா.ஜ. பிரமுகர் உள்பட 22 பேரும் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Related Stories: