பீகாரில் போலீசார் மது அருந்‌தினால் பாரபட்சமின்றி 'டிஸ்மிஸ்'செய்யுங்க!: முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி..!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் காவல்துறையினர் யாராவது மது அருந்தினால் அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்யும்படி அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி பீகார் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுவிலக்கை மீறுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறி வீட்டில் மது வைத்திருந்தால் அவரது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது போன்ற கடும் தண்டனைகளை அறிவித்திருந்தார். இந்த நிலையில் தலைநகர் பாட்னாவில் காவல்துறை உயரதிகாரிகள் உடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், காவல்துறையினர் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்றும் மாநிலத்தில் காவல்துறையை சேர்ந்த யாராவது மது அருந்தினால் அவர்களை பாரமாற்றமின்றி பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மதுவால் சமுதாயத்தில் ஏராளமான தீய செயல்கள் நடக்கின்றன. பீகாரில் மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியாத போலீஸ் அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு சென்று ஒன்று செய்யாமல் உட்காருங்கள் என முதல்வர் நிதிஷ்குமார் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டபோது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: