டிரம்ப்புக்கு எதிராக விசாரணை கமிஷன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த ஜனவரி 6ம் தேதி வெள்ளை மாளிகையில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களால் மிகப்பெரும் கலவரம் நடந்தது. இந்த கலவரத்தை தூண்டியது தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், போதுமான வாக்குகள் இன்றி தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆனாலும் டிரம்ப்பை விடப் போவதில்லை என தீர்மானித்துள்ள அதிபர் பைடன் நிர்வாகம், கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க முடிவெடுத்துள்ளது.  இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதற்காக உருவாக்கப்பட்டது போல கண்டிப்பான ஆணையமாக இதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் டிரம்புக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட உள்ளன.

Related Stories: