தேர்தல் காலங்களில் ரூ. 2 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்: வணிகர்கள் வலியுறுத்தல்

திண்டுக்கல்: தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகுவிற்கு, திண்டுக்கல் தொழில் வர்த்தக சங்க தலைவர் கிருபாகரன் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில்,  வணிகர்கள் தகுந்த ஆவணங்களுடன் பணம் எடுத்து சென்றாலும்  அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யும் நிலை ஏற்பட்டது. தேர்தலை காரணம் காட்டி கடும் நெருக்கடி கொடுத்தால் வணிகம் மிகவும் பாதிக்கப்படும். வணிகம் செய்பவர்கள் பொருட்கள் வாங்க, நிறுவனத்தின் லெட்டர் பேடில் எழுதி ரூ.2 லட்சம்  வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.

சுப நிகழ்ச்சிகளுக்கு நகை, ஜவுளி, பலசரக்கு போன்றவை வாங்க குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வரை அனுமதிக்க வேண்டும். அதிகாரிகளால் கைப்பற்றப்படும் பணம் அந்தந்த மாவட்ட  கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். முறையான கணக்குகளை கொடுத்தால் அந்த பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும். கடந்த தேர்தல் காலங்களில் பணத்தை திரும்ப பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. எங்களது  கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும்‌’ என்று கூறியுள்ளார்.

Related Stories: