பூண்டி நீர்த்தேக்க ஷட்டரில் ஓட்டை:தண்ணீர் கசிவதால் ஆபத்துக்கு வாய்ப்பு

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்தின் ஷட்டரில் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேறுகிறது. திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. தற்போது நீர்வரத்து  மற்றும் மழைநீர் வரத்து காரணமாக பூண்டி ஏரி நிரம்பியுள்ளது. இந்த நிலையில் பூண்டி ஏரியின் ஷட்டர்களில் ஓட்டை விழுந்து அதன் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீரை சேமித்து  வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஓட்டை பெரிதாகி தண்ணீர் வெளியேறினால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாய நிலத்துக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு ஷட்டர் ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை  எடுக்கவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பல கோடி ரூபாயில் திட்டங்களை தீட்டி மக்களுக்கு தேவையான நீராதாரங்களை பெருக்குவதாக, தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால் அப்படியோரு பணிகள் நடைபெறுவதாக தெரியவில்லை. பூண்டி  ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீரை சேமிக்கும் வகையில், ஷட்டர் கசிவினை அடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

Related Stories: