விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட பெங்களூரு மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட பெங்களூரு மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அற்பமான குற்றச்சாட்டுகளைப் புனைந்து திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார். அரசை விமர்சிப்பவர்களைக் கொடுங்கோல் வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது. இத்தகைய தண்டிக்கும் போக்கைத் தவிர்த்து, இளைஞர்களிடம் இருந்து எழும் எதிர்ப்புக் குரல்களுக்குச் செவிமடுக்கவேண்டும் என்று பா.ஜ.க. அரசைக் கேட்டுக்கொள்கிறேன். என ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தி;ல் பதிவிட்டுள்ளார்.

Related Stories: