கீழ்பேரமநல்லூர் ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு இலவச கறவை மாடுகள்: அமைச்சர் பெஞ்ஜமின் வழங்கினார்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் கீழ்பேரமநல்லூர் ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இலவச கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளை வழங்கி பேசியதாவது: தமிழர அரசு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை அறித்து செயல்படுத்தி வருகிறது.

சமுதாயத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திட, ஏழை எளிய கிராமப்புற இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் வெற்றிபெற்றிட தேவையான சிறப்புத்திட்டங்களை தமிழக அரசு முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், திட்ட இயக்குநர் ஸ்ரீதர், எம்எல்ஏ பழனி, முன்னாள் எம்எல்ஏக்கள் வி.சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம், மைதிலி திருநாவுக்கரசு, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நடராஜகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: