சினிமா பாணியில் போலீஸ் துரத்தி பிடித்தது போடியிலிருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட சிலை மீட்பு: வாலிபர் கைது

போடி: போடியிலிருந்து கேரளாவிற்கு பழமை வாய்ந்த நடராஜர் சிலையை காரில் கடத்திய வாலிபரை, போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்த சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், போடி அருகே தமிழக, கேரள எல்லையில் உள்ள முந்தல் சோதனைச்சாவடியில் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போடியிலிருந்து கேரளா செல்வதற்கு ஒரு கார் வேகமாக வந்தது. போலீசாரை கண்டவுடன்  அந்த வாகனம் நிற்காமல் திரும்பி போடி நோக்கி வேகமெடுத்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் சினிமா பாணியில் அந்த காரை விரட்டினர். போஜன் பார்க் அருகே அந்த காரை மடக்கினர். காரை ஓட்டி வந்த போடி எஸ்எஸ்.புரம் தங்கமுத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(26) எனத் தெரிய வந்தது. காரில் கோணிப்பையில் பழமை வாய்ந்த நடராஜர் சிலை கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. எங்கிருந்து இந்த சிலை கடத்தப்பட்டது, கேரளாவிற்கு யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து மணிகண்டனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் வாலிபரை போலீசார் விரட்டி பிடித்த சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: