ஜெயங்கொண்டத்தில் அனல் மின் திட்டத்தை கைவிடக்கோரி ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டத்தில் கடந்த 27 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் நிலக்கரி அனல் மின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஏர் உழவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் துவங்கி 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள மேலூர், கல்லாத்தூர், தேவனூர், கீழகுடியிருப்பு, புதுக்குடி, இலையூர், மருக்காலங்குறிச்சி, தண்டலை உள்ளிட்ட 13 கிராமங்களில் கடந்த 1996ல் ஆயிரத்து 210 பேரிடம் 8ஆயிரத்து 370 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் ஆயிரத்து 30 ஏக்கர் நிலம் அரசு நிலமும் கையகப்படுத்தப்பட்டது. 27 வருடமாக இத்திட்டத்தை அரசு செயல்படுத்தாததால் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தொடர்ந்து திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளிடம் தங்களது பட்டா நிலத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும், இழப்பீட்டுத் தொகையாக ஒரு ஏக்கருக்கு 30 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி. தமிழ்நாடு ஏர் உழவர் சங்க தலைவர் சுபா இளவரசன் தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணி திருச்சி சாலையில் இருந்து மாட்டுவண்டியில் புறப்பட்டு பயணியர் விடுதி அருகே முடிவடைந்தது. பின்னர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் சங்க துணைத்தலைவர் தலைவர் அன்பழகன் துவக்கி வைத்தார். அறிவழகன், செங்குட்டுவன், பரமேஸ்வரி, செல்வி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மீத்தேன் எதிர்ப்பு தமிழ் மண்ணுரிமை இயக்கம் ஜெயராமன், விருத்தாசலம் இளையராஜா, தமிழர் நீதிக் கட்சி மகளிரணி தலைவி கவியரசி, உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். ராஜேந்திரபட்டினம் துரைசாமி, குப்பம் சைமன் தமிழன் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், அறிவுமழை, ஆசைத்தம்பி, மதியழகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இளமங்கலம் ரவி வரவேற்றார். கருணா நன்றி கூறினார்.

Related Stories: