மோடி பற்றி அவதூறு பரப்பியதாக புகார்: சுந்தர் பிச்சை மீது உபி போலீஸ் வழக்கு

வாரணாசி:  கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு அவதூறு ஏற்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. முதலில் வாட்ஸ் ஆப், பின்னர் யூடியூப்பிலும் இது வைரலானது.  இதை  5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவிற்கு வாரணாசியை சேர்ந்த ஒருவர் ஆட்சேபனை தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவருக்கு 8,500 செல்போன் மிரட்டல்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை மற்றும் 17 பேர் மீது பெலுபூர் காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி அவர் புகார் கொடுத்தார்.  இந்த புகாரினை தொடர்ந்து, சுந்தர் பிச்சை மற்றும்  கூகுள் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் 17  பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என தெரியவந்ததை அடுத்து சுந்தர்பிச்சை மற்றும் கூகுள் தலைமை அதிகாரிகள் 3 பேரின் பெயர்களை போலீசார் நீக்கி உள்ளனர்.

Related Stories: