பிரிட்டனில் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 236 பேர் உயிரிழப்பு... கொரோனா தடுப்பூசியை கண்டு அதிரும் பிரிட்டன் மக்கள்

லண்டன்: ரிட்டனில் கொரோனா தொற்றுக்காக ஃபைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட 236 பேர் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளதா அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி  கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா தொற்று 209-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடித்து வருகின்றனர். இந்திய உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் தான் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இன்னும் பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், சோதனை நிலையில் மட்டுமே உள்ளது. இதனால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் ஃபைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை ரிட்டனில் போட்டுக்கொண்ட 236 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டு மருந்து மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேபோல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 90 பேரும் இறந்துள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசியை போட்டு இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்றும், கொரோனா தடுப்பூசியால் தான் உயிரிழந்தார்கள் என்பது உறுதியாகவில்லை என சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் தற்போதுவரை சுமார் 10 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: