சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க ஓபிஎஸ் ஆதரவு: 2016ம் ஆண்டு செய்தியை வெளியிட்டு நமது எம்ஜிஆர் நாளிதழ் சூசகம்

சென்னை: இந்தியா, கொரோனா உயிரிழப்பு சசிகலா பதவியேற்க ஓபிஎஸ் ஆதரவு என்று 2016-ம் ஆண்டில் வெளியான பத்திரிக்கை செய்தியை நமது எம்ஜிஆர் நாளிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருப்பதாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவிப்பதாக 2016-ம் ஆண்டு வெளியான செய்தியை இன்றைய தினம் நமது எம்ஜிஆர் பத்திரிக்கையில் மீண்டும் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி உள்ள சசிகலா 2 தினங்களுக்கு முன்னதாக சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர்கள் அடுத்தகட்டமாக அரசியல் ரீதியான செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட போவதாகவும், வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதே நேரத்தில் அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு பொது எதிரியை களத்தில் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் சசிகலா தரப்பில் இருந்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அதிமுகவில் இருக்க கூடிய பல முக்கிய நிர்வாகிகள் சசிகலா அவர்களுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்ற தகவல்களும் சசிகலா தரப்பில் இருந்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்க கூடிய ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாராக பொறுப்பேற்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலும், அவரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த தீர்மானத்தை நேரடியாக போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் உள்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் அப்போது 2016-ம் ஆண்டு அவர்கள் ஆதரவு தெரிவித்த அந்த குறிப்பிட்ட செய்தியை மீண்டும் இன்றைய தினம் நமது எம்ஜிஆர் நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுகவை கட்டுக்கோப்பாகவும், ராணுவ ஒழுங்கோடும், அனைத்து நிர்வாகிகளையும் ஒன்றிணைத்து கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அதற்க்கு சசிகலா பொறுப்பேற்றால் மட்டுமே சாத்தியம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்த செய்தியை இன்றைய தினம் நமது எம்ஜிஆர் பத்திரிக்கையில் மீண்டும் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் யார் யாரெல்லாம் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்போகிறார்கள் என்ற மிகப்பெரிய ஒரு கேள்வி அரசியல் பொதுத்தளத்தில் இருந்து வரக்கூடிய சூழ்நிலையில் ஓபிஎஸ் இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஆதரவாக கருத்துக்கள் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: