இறந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால் வாக்காளர் பட்டியலை ரத்து செய்யக்கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மதுரை: தென்காசியை சேர்ந்த சைலப்ப கல்யாண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொதுத்தேர்தல்களில் நூறு சதவீத வாக்குப்பதிவு என்பதை இலக்காக வைத்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஆனால் இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் தொடர்வது, ஒருவருக்கு 2 இடங்களில் வாக்குகள் இருப்பது போன்ற பல குளறுபடிகள் தொடர்கின்றன.

நியாயமான முறையில் தேர்தல் நடப்பதை உறுதிப்படுத்திட இறந்தவர்களின் பெயர்கள், இருமுறை பதிவுள்ள பெயர்களை நீக்கவும், ஜன. 20ல் வெளியான வாக்காளர் பட்டியலை ரத்து செய்து, உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தேர்தல் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 17க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: