செங்கோட்டை வன்முறை முக்கிய நபர் பஞ்சாபில் கைது: 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

புதுடெல்லி: செங்கோட்டை வன்முறையில் தேடப்பட்ட முக்கிய நபர் பஞ்சாப் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். செங்கோட்டை வன்முறை தொடர்பாக விசாரிக்கும் பொறுப்பு டெல்லி சிறப்பு காவல்படை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் செங்கோட்டை வன்முறை தொடர்பாக நடிகர் தீப்சித்து, ஜூகுராஜ் சிங், குர்ஜோத்சிங், குர்ஜந்த்சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக டெல்லி செங்கோட்டையில் இருந்த தேசிய கொடியை அகற்றி சீக்கிய மதக்கொடியை ஏற்றியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தலைமறைவான அவர்கள் பற்றி தகவல் கொடுத்தால் 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து இருந்தனர். இதில் நடிாக் தீப்சித்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதே போல் பூட்டாசிங், சுக்தேவ்சிங், ஜெய்பீர்சிங், இக்பால்சிங் ஆகியோர் மீது போராட்டக்காரர்களை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இவர்கள் பற்றிய தகவலை தெரிவித்தால் ₹50 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர். இவர்களில் இக்பால் சிங் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பஞ்சபர் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியில் இருந்த அவரை டெல்லி சிறப்பு காவல்படை போலீசார் சென்று கைது செய்தனர். அவரை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் பூர்வா மெஹ்ரா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, ‘ டெல்லி வன்முறைக்கு இக்பால்சிங் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

வன்முறை தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களில் அவர் இடம் பெற்றுள்ளார். இதுபற்றி அவரிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டும். அவருடன் இந்த போராட்டத்திற்கு வந்தவர்கள் யார், அவர்களை இயக்கியது யார், அவர்களுக்கு நிதிஉதவி செய்தது யார் என்பது பற்றியெல்லாம் விசாரிக்க வேண்டும். வன்முறையை தூண்டியதில் இக்பால் சிங் முக்கியப்பங்கு வகித்தார். இதில் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளது. ஏனெனில் அவர் கும்பலை வன்முறைக்கு தூண்டி விடுவது தொடர்பான ஒருமணி நேர வீடியோ பஞ்சாப் செய்தி சேனலில் வெளியானது. அதை நாங்கள் பெறவேண்டும். ஏனெனில் அவர்தான் அந்த செய்தி சேனலை நடத்துகிறார்.

எனவே 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். இக்பால் சிங் தரப்பில்,’ நான் வன்முறை நோக்கோடு செங்கோட்டைக்கு செல்லவில்லை. அனைவரையும் போல் நான் எந்தவித சதித்திட்டமும் இல்லாமல் தான் செங்கோட்டைக்கு சென்றேன். அங்கு சென்றபிறகு உணர்ச்சி கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டது. நான் என்ன செய்தேன் என்பது எனது வீடியோவில் தெளிவாக உள்ளது. நான் யாரையும் தூண்டி விடவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி பூர்வா மெஹ்ரா, கைது செய்யப்பட்ட இக்பால்சிங்கை 7 நாள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டார்.

எஸ்ஐடி விசாரணை வேண்டும் விவசாயி தாத்தா கோரிக்கை

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் நவ்ரீத்சிங் என்பவர் பலியானார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டதாக விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் டிராக்டர் கவிழ்ந்து அவர் இறந்து விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி நவ்ரீத்சிங் தாத்தா ஹர்தீப்சிங் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,’ எனது பேரன் மரணம் குறித்து ஐகோர்ட் நேரடி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: