ஆஸ்ரயா திட்டத்தின் கீழ் வீட்டு மனை வழங்க லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

ஹாசன்: ஆஸ்ரயா திட்டத்தின் கீழ் வீட்டு மனை வழங்க லஞ்சம் பெற்ற ஊரக வளர்ச்சி அதிகாரியை ஏசிபி அதிகாரிகள் கைது செய்தனர். ஹாசன் மாவட்டம் ஆலூரு தாலுகா கணதூரு கிராமத்தை ேசர்ந்தவர் ரவி. இவர் ராஜீவ்காந்தி வீட்டு வசதி திட்டத்தின் வீட்டுமனை பெற விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக ஊரக வளர்ச்சி அதிகாரி ரங்கசாமி என்பவரை சந்தித்தபோது இந்த பணியை முடித்து ெகாடுக்க ₹8 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக 3 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு இரண்டாவது தவணையாக ₹5 ஆயிரம் தரும்படி கூறியுள்ளார்.  இந்நிலையில் 5 ஆயிரம் கொடுக்க மனமில்லாமல் இதுகுறித்து ஊழல் தடுப்பு போலீசாருக்கு ரவி தகவல் அளித்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் ரவி இரண்டாவது தவணையாக 5 ஆயிரத்தை கொடுக்க சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த ஏசிபி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு ேபாலீசார் 8 ஆயிரத்தை ரவியிடமிருந்து வாங்க முயன்ற ரங்கசாமியை கையும் களவுமாக ைகது செய்தனர்.

Related Stories: