இந்தோனேஷியா விமானம் வேக கட்டுப்பாடு கருவி செயலிழப்பால் விபத்து: முதல் கட்ட அறிக்கையில் தகவல்

ஜகார்தா: இந்தோனேஷியா விமான விபத்துக்கு விமானத்தின் வேகக் கட்டுப்பாடு தானியங்கி கருவி செயலிழந்ததே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 9ம் தேதி இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்டு சென்ற ஸ்ரீவிஜா ஏர்லைன்ஸ் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 62 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு விசாரணை நடத்தியது.

விமானம் கடலில் விழுவதற்கான முழுமையான காரணத்தை கண்டறிவதில் குழப்பம் நீடிப்பதாக  குழு தெரிவித்துள்ளது. மேலும் விபத்து குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ‘விமானத்தின் வேக கட்டுப்பாடு கருவியின் நெம்புகோலானது தானாக பின்னோக்கி நகர்ந்துள்ளது. மேலும், அந்த இயந்திரத்தின் செயல்பாட்டு திறன் குறைந்துள்ளது. வேக கட்டுப்பாடு தானியங்கி செயலிழந்ததால் விமானிகளின் கட்டுப்பாட்ைட இழந்து விமானம் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: