பிச்சை எடுப்பது குற்றமா?: மாநில அரசுகள் இயற்றிய சட்டத்திற்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்..!!

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் இயற்றிய சட்டத்திற்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றிருக்கிறது. பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என சட்டம் ஏற்றிய மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மேற்கொள்காட்டி பஞ்சாப், மஹாராஷ்டிரா, உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தனித்தனியான சரசுகளை இயற்றியிருந்தனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடக்கூடிய விஷயமாக இருந்தாலும் பெரும்பாலான மாநிலங்களில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டது. சில மாநிலங்களில் பிச்சை எடுப்பதற்கு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்பட்டன.

குறிப்பாக பேருந்து, விமான மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிச்சை எடுப்பது விருப்பத்தின் பேரில் செய்வதல்ல, சந்தர்ப்ப சூழலே இத்தகைய மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம். பிச்சை எடுப்பதை கிரிமினல் குற்றமாக அறிவிப்பது என்பது அவர்களுக்கு மேலும் அழுத்தம் தரும் வகையில் அமைந்துவிடும் என்று பல்வேறு பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் ஆகாது என 2018ல் டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: