ஆந்திராவில் அண்ணன் ஆட்சி: தெலுங்கானாவில் யார்?: ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி ஷர்மிளா புதிய கட்சி தொடங்க முடிவு.!!!

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் அமர வைக்க அவரின் சகோதரி ஷர்மிளா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனது சகோதரர் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பாத யாத்திரையை மேற்கொண்டு மக்கள் மத்தியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சென்றடைவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

எளிமையான முறையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவதற்கு ஷர்மிளாவின் பிரச்சாரமும் மக்கள் மத்தியில் தூண்டுதலாக இருந்தது. இதற்கிடையே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ஓய். எஸ்.ஷர்மிளா மோதிரம் திருடு போன சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில், சகோதரர்  ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சி புரிந்து வரக்கூடிய நிலையில், அருகில் உள்ள தெலங்கானா மாநிலத்தில் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட இல்லை. இதனால், தற்போது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவின் பார்பை தெலுங்கானா பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில் தனது தந்தை முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி தாய் விஜயலட்சுமியின் 50-ம் ஆண்டு திருமண நாளான இன்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் லோட்டஸ் பாண்டில் உள்ள தனது இல்லத்தில் நல்கொண்டா மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஒய் எஸ் ஷர்மிளா ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஷர்மிளா, ஒருங்கிணைந்த ஆந்திராவில் எனது தந்தை ஆட்சி செய்தார். ஆனால் தற்போது ஆந்திராவில் எனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி செய்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தில் எங்கள் ஆட்சி இல்லை. எனவே, தெலுங்கானாவிலும் எங்கள் ஆட்சி மைய வேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக நல்கொண்டா மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தெலங்கானா மாநிலத்திற்கான புதிய கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஷர்மிளாவின் இந்த அறிவிப்பால் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஐதராபாத்தில் உள்ள லோட்டஸ் பாண்ட் இல்லத்தில் கட்சி தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க  கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், தெலுங்கானாவில் சந்திர  சேகரராவ் தலைமையிலான சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் எப்படி ஆட்சியை பிடிக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories: