கோயில்களின் நில ஆக்கிரமிப்புகளை கண்டறிய குழு அமைக்க கோரிய வழக்கு: மார்ச் 5-க்கு ஒத்திவைத்து மதுரைக் கிளை உத்தரவு

கோயில்களின் நில ஆக்கிரமிப்புகளை கண்டறிய குழு அமைக்க கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அறிநிலையத்துறை, நில நிர்வாக ஆணையர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலகம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி விசாரணையை மார்ச் 5-க்கு ஒத்திவைத்தனர். தமிழகம் முழுவதும் இந்து கோயிலுக்கு சொந்தமான ஐந்தரை லட்சம் ஏக்கர் நிலமும், ஒன்றரை லட்சம் ஏக்கர் புறம் போக்கு நிலமும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டது.

கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், இந்த கோயில்களின் சொத்துக்களின் காவலனாக இருக்க வேண்டிய இந்துசமய அறநிலையத்துறை தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களைக் கண்டறிந்து சொத்துக்களை மீட்பதற்காக ஒரு குழுவை இந்து சமய அறநிலையத்துறை அமைத்திருந்தது. இந்த குழு உறுப்பினர்களை மண்டல வாரியாக அனுப்பி கோயில்களுக்கு சென்று ஆய்வு செய்து அந்த கோயில்களின் சொத்துக்கள், யாரிடம் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியிருந்தது.

Related Stories: