எடப்பாடிக்கு சனி பெயர்ச்சியை விட சசி பெயர்ச்சி மோசமாக உள்ளது: போட்டுத் தாக்கும் நாஞ்சில் சம்பத்

அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் ‘மு.க.ஸ்டாலின் தலைமை காலத்தின் தேவை’ என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொரட்டூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:  இந்தியா இன்று இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது. வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கேரளா கம்யூனிஸ்ட் அரசு சட்டமன்றத்தை கூட்ட கூறுகிறது. ஆனால், ஆளுநர் கூட்ட தேவையில்லை என்கிறார். கேரளாவே கொந்தளித்தது. கேரளாவில்  சட்டமன்றம் கூடி  வேளாண் மசோதாவை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்தார்கள். மேலும், ஜார்கண்ட், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய அரசுகளும் சட்ட மசோதாவை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்தார்கள். தமிழகத்தில் அதிமுக அரசு தீர்மானம் கூட கொண்டு வந்திருக்க வேண்டாம்.

அதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதமாக கூட செய்திருக்க வேண்டாமா? இதனை விட்டு அந்த தீர்மானத்தை அதிமுக ஆதரித்தது. எடப்பாடிக்கு சனிப்பெயர்ச்சியை விட, சசி பெயர்ச்சி மோசமாக உள்ளது. சசிகலாவால் நான் முதலமைச்சராகவில்லை, சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டேன் என எடப்பாடி கூறுகிறார். கூவத்தூர் கூத்தில் எடப்பாடி முதல்வர் ஆகிவிட்டார். அவர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சசிகலாவின் காலில் விழுந்து, ஊர்ந்து வந்து தான் எடப்பாடி முதல்வரானார்  இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

Related Stories: