கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்: கே.எஸ்.அழகிரி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் தினசரி சேகரிக்கப்படும் குப்பை கொடுங்கையூரில் 345 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிடங்கில் கொட்டப்படுகிறது. பல ஆண்டாக கொட்டப்படும் இந்த குப்பை 300 அடி உயரத்துக்கு மலைபோல் குவிந்துள்ளது. தினமும் 252 லாரிகள் மூலம் இங்கு கொட்டப்படும் 2,500 டன் குப்பையில், 200 டன் குப்பை மட்டுமே மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டவை. மீதமுள்ள 2,300 டன் குப்பை தரம் பிரிக்கப்படாதவை. இதனை கொளுத்துவதால், சுகாதார பிரச்னை ஏற்பட்டு கொடுங்கையூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெ.டில்லிபாபு தலைமையில் இன்று (ஞாயிறு) மாலை 4 மணிக்கு, பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை திரட்டுகிற வகையில் குப்பை கிடங்கின் பிரதான நுழைவாயிலில் நடைபெறவுள்ள கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைக்க உள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: