வேளச்சேரி தொகுதிக்கு குஸ்தி! அதிமுக மாவட்ட செயலாளர், பாஜக மாநில செயலாளர் இடையே கடும் போட்டி

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சேர்வது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இன்னும் தொகுதி பங்கீடு மட்டும் தான் எஞ்சியுள்ளது. இந்த நிலையில் பாஜக போட்டியிடும் என்று கண்டறியப்பட்டுள்ள தொகுதிகளில் பாஜகவினர் இறங்கி தேர்தல் பணியை தொடங்கியுள்ளனர். சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, துறைமுகத்தில் தங்களது தேர்தல் வேலையை தொடங்கியிருக்கிறார்கள். வேளச்சேரியை பொறுத்தவரை கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டவரும், தற்போதைய பாஜக மாநில செயலாளருமான டால்பின் ஸ்ரீதர் தனது தேர்தல் வேலையை தொடங்கியிருக்கிறார். தனக்கு தான் சீட் கிடைக்கும் என்ற உறுதியில் கே.கே.நகரில் உள்ள தனது வீட்டையை காலி செய்து வேளச்சேரியில் போய் குடியிருந்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் வட்ட அளவிலும் கூட்டங்களையும், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதே நேரத்தில் அந்த தொகுதியை பிடிக்க அதிமுக மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்களும் அந்த தொகுதியை கேட்டு வருகின்றனர். அசோக் 2011ல் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த முறை அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதே போல வேளச்சேரியை குறி வைத்க்கும் பாஜக மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர் கடந்த முறை இந்த தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அவர் 14472 வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த தொகுதிக்கு அதிமுகவுக்கா? அல்லது பாஜகவுக்கா? என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. வேட்பாளர்  ரேஸில் ஜெயிக்க போவது யார் என்பது இந்த மாதம் இறுதியில் தெரியவரும்.

Related Stories: