டெண்டுல்கர் கட்-அவுட்டில் கழிவு ஆயில் ஊற்றி போராட்டம்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டினருக்கு எதிராக கருத்து ெதரிவித்ததால் கொச்சியில் சச்சின் டெண்டுக்கரின் கட்-அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ெவளிநாடுகளை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரபல பாப்பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் சூடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பர்க் உள்பட பலர் ஆதரவு கருத்து தெரிவித்தனர். வெளிநாட்டினரின் ஆதரவுக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கண்டனம் தெரிவித்தார். இந்தியாவின் ஒற்றுமையை சீர் குலைக்க யாரும் முயற்சிக்க ேவண்டாம் என அவர் கூறியிருந்தார்.

இதனால் சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இளைஞர் காங்கிசார் டெண்டுல்கருக்கு எதிராக ேபாராட்டம் நடத்தினர். அப்போது டெண்டுல்கரின் கட்-அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றினர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: