மார்ச் 13ல் தொடங்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.11ல் தொடக்கம் 11 நாட்களில் நடத்தி முடிக்க திட்டம்

நாகர்கோவில், மார்ச் 9: பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்க உள்ள நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 21ம் தேதிக்குள் முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் 13ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. ஏப்ரல் மாதம் 3ம் தேதி  வரை நடக்கிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்குகின்ற நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகளையும் மேற்கொள்ள தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் விடைத்தாள்கள் சேகரிப்பு மையங்களில் இருந்து  மண்டல மையங்களுக்கு மார்ச் 23ம் தேதி மற்றும் ஏப்ரல் 4ம் தேதியும், இரண்டு கட்டமாக எடுத்து செல்லப்படும். மார்ச் 24, 25 தேதிகளிலும், ஏப்ரல் 5, 6 தேதிகளிலும்  விடைத்தாள்கள் கலக்கல் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 7ம் தேதி மண்டல மையங்களில் இருந்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்து செல்லப்படும். ஏப்ரல் 10ம் தேதி தலைமை தேர்வர் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வார். தொடர்ந்து உதவி தேர்வர்கள் ஏப்ரல் 11ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வர். ஏப்ரல் 21ம் தேதிக்குள் மொத்தம் 11 நாட்களில்  விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை போன்று பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 14ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5ம் தேதி வரை நடக்கிறது. விடைத்தாள்கள் மார்ச் 25ம் தேதி சேகரிப்பு மையங்களில் இருந்து மண்டல மையங்களுக்கு எடுத்து செல்லப்படும். அங்கு மார்ச் 26, 27 தேதிகளில் கலக்கல் நடைபெறும். ஏப்ரல் 6ம் தேதி சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்படும் விடைத்தாள்கள் ஏப்ரல் 10, 11 தேதிகளில் கலக்கல் நடத்தப்படும். மண்டல அலுவலகங்களில் இருந்து திருத்தும் மையங்களுக்கு ஏப்ரல் 12ம் தேதி விடைத்தாள்கள் எடுத்து செல்லப்படும். முதன்மை தேர்வர்கள் ஏப்ரல் 14ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்வர். பிளஸ் 1 ‘அரியர்’ தேர்வுகளுக்கு தனியாக ஒரு முதன்மை தேர்வர் நியமிக்கப்படுவார். உதவி தேர்வர்கள் ஏப்ரல் 15ம் தேதி முதல் ‘அரியர்’ விடைத்தாள்களையும், ஏப்ரல் 24 முதல் மே 4ம் தேதி வரை ‘ரெகுலர்’ விடைத்தாள்களை திருத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். அந்த வகையில் தேர்வுத்துறை கால அட்டவணை தயாரித்து தேர்வுத்துறை விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது….

The post மார்ச் 13ல் தொடங்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.11ல் தொடக்கம் 11 நாட்களில் நடத்தி முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: