மக்கள் குறைதீர் கூட்டம் 619 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

புதுக்கோட்டை, டிச.23: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக 10அம்ச ேகாரிக்ககைளை வலியுறுத்தி 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் செவிலியர்கள். தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் செவிலியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான 365 படி எம் ஆர் பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,

பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதியம் உயர்வு வழங்கிட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் கடந்த 19ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் நேற்று நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

குறிப்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை பதாகைகளாக ஏந்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Related Stories: