இன்டர்நெட் முடக்கம், முள்வேலி அமைத்தாலும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்படாது: எஸ்கேஎம் தலைவர் தகவல்

காஜியாபாத்: டெல்லி எல்லைகளில் இன்டர்நெட் சேவை முடக்கம், பல கட்ட இரும்பு தடுப்புகள் மற்றும் முள்வேலி தடை என அரசின் நடவடிக்கைகள் ஒரு புறம் தொடர்ந்தாலும், அதனால் பேச்சுவார்த்தை சுணக்கம் ஏற்படாது என சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தலைவர் கூறியுள்ளார். விவசாயிகள் கும்பல் கூடுவதை தவிர்க்கவும், திடீரென டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்கும் நோக்கத்திலும், காஜிப்பூர் எல்லையில் பல அடுக்கு பேரிகார்டுகளும், முள்வேளி தடுப்புகளும் போடப்பட்டு  உள்ளது. இதே நிலைமை சிங்கு, திக்ரி எல்லைகளிலும் நீடிக்கிறது. மேலும் போலீஸ் படையும், துணை ராணுவமும் அங்கு தயார் நிலையில் இருந்து வருகிறது. அது மட்டுமன்றி டெல்லி எல்லைகளிலும் சுற்று வட்டாரத்திலும் கடந்த 29ம் தேதி தொடங்கி இன்டர்நெட் சேவை முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது. அதனால் சமூகவலைதளங்கள் உள்பட ஊடகங்களுக்கு செய்தி சென்று சேர முடியாத நிலை டெல்லி எல்லைகளில் காணப்படுகிறது.

இந்நிலையில், பாரதிய கிசான் சங்க (பிகேயு) தலைவர் ராகேஷ் திகய்த்தை, எஸ்கேஎம்மைச்  சேர்ந்த ஏராளமான உறுப்பினர்களுடன் அதன் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகா  நேற்று சந்தித்தார்.

அப்போது, உருக்கமான வேண்டுகோள் விடுத்து, விவசாயிகளின் போராட்டம் நீர்த்துப் போகும் எனும் மத்திய அரசின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியதற்காக ராகேஷுக்கு ஜோகிந்தர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், இன்டர்நெட் சேவை முடக்கம், பேர்கார்டுகள் தொல்லை, முள்வேலி தடுப்பு, தண்ணீர் விநியோகம் பாதிப்பு என போராட்ட பகுதிகளை சுற்றி வளைத்து பல தர்மசங்கடங்களை மத்திய அரசு ஏற்படுத்தி இருந்தாலும், இது போன்ற இக்கட்டுகளால், அரசுடனான பேச்சுவார்த்தை எந்த விதத்திலும் தொய்வு ஏற்படாது’’, என நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories: