தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி. டாக்டர் சாந்தா மறைவுக்கு இரங்கல்: 13 நிமிடங்களில் கூட்டம் முடிந்தது

சென்னை: தமிழக சட்டபேரவை கூட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் 2ம் தேதி (நேற்று முன்தினம்) சென்னை, கலைவாணர் அரங்கில் கூடியது.  இதைத்தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்ைத வரும் 5ம் தேதி வரை (வெள்ளி) நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் கவர்னர் உரையை புறக்கணித்த திமுக, காங்கிரஸ், இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று 2வது நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வீ.சந்திரன், சு.சிவராஜ், மா.மீனாட்சி சுந்தரம், ஜி.பி.வெங்கிடு, இரா.அரிக்குமார், கே.சி.கருணாகரன்,  பா.மனோகரன், பி.வெற்றிவேல், லி.அய்யலுசாமி, பி.முகமது இஸ்மாயில், வி.தண்டாயுதபாணி, எஸ்.அக்னிராஜு, சொ.ந.பழனிசாமி, வி.சிவகாமி, ஏ.டி.செல்லச்சாமி, எஸ்.ஆர்.ராதா, எஸ்.மணி, கே.ஏ.மணி, டி.யசோதா, ப.வெ.தாமோதரன்,  இரா.சண்முகம், மு.பழனிவேலன் உள்ளிட்ட 22 பேர் மறைவிற்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் தனபால் வசித்தார்.

இதையடுத்து மறைந்த உறுப்பினர்களுக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எழுந்து நின்று 2 மணி துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து,  மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சட்டபேரவை கூடும். நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய பேரவை கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு 13 நிமிடங்களில் கூட்டம் முடிந்தது. கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளதால், எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ்,  இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சி சட்டப்பேரவைக்கு வரவில்லை. இதனால் சட்டப்பேரவையில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தது.

Related Stories: