அமெரிக்காவில் துயரம்!: தேடுதல் வாரண்ட் கொடுக்க சென்ற உளவுத்துறை அதிகாரிகள் 2 பேர் சுட்டுக்கொலை..ஜோ பைடன் இரங்கல்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேடுதல் வாரண்ட் கொடுக்க சென்ற இடத்தில் உளவுத்துறை அதிகாரிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு அதிபர் ஜோ பைடன் வேதனை தெரிவித்துள்ளார். ஃபுளோரிடா மாகாணத்தின் சன்ரைஸ் என்ற இடத்தில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. குழந்தைகள் ஆபாச வழக்கு ஒன்றில் நீதிமன்றம் உத்தரவின் பேரில் தேடுதல் வாரண்டை கொடுப்பதற்காக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டிற்கு எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சென்றிருந்தனர்.

அப்போது நடத்தப்பட்ட என்கவுண்டரில் 2 அதிகாரிகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்தை கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதயம் வலிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஃபுளோரிடா சம்பவத்தில் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். 3 பேர் காயம் அடைந்துள்ளனர். நான் மட்டுமல்லாது துணை அதிபர், பாதுகாப்புத்துறை செயலர் ஆகியோரும் இறந்தவர்களின் குடும்பத்தினரின் வேதனையை உணர்கிறோம்.

உண்மையிலேயே என்ன நடந்தது என்பது குறித்து எஃப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது என குறிப்பிட்டார். தொடர்ந்து, வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரும் உயிரிழந்தார். ஆனால் அவர் எவ்வாறு இறந்தார் என தெரியவில்லை. அந்த குடியிருப்பில் இருந்து அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தத்தில் அமெரிக்க உளவுத்துறை வரலாற்றில் இரு அதிகாரிகள் இதுபோன்று என்கவுண்டரில் கொல்லப்பட்டது இதற்கு முன்னர் இல்லாத நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Related Stories: