வையம்பட்டி அருகே 55 நிமிடத்தில் 55 வகையான இயற்கை உணவுகள் தயாரிப்பு: பள்ளி மாணவி சாதனை

மணப்பாறை: வையம்பட்டி அருகே 55 நிமிடத்தில் 55 வவையான இயற்கை உணவுகள் தயாரித்து பள்ளி மாணவி சாதனை படைத்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள கரையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. தனியார் பள்ளி ஆசிாியை. இவர்களது மகள் தர்ஷினி (13). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி தர்ஷினி, பாரம்பரியமான இயற்கை உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று காலை கல்பட்டி கிராமத்தில் 55 நிமிடத்தில் 55 வவையான இயற்கை உணவு வகைகளை தயாரித்து சாதனை படைத்தார். அதாவது, கம்பு தோரை, ஆவாரம்பூ தோசை, துளசி தோசை, முந்திரி ரவா தோசை, மைதா, சர்க்கரை இல்லாத பானிபூாி உள்ளிட்ட 55 வகையான இயற்கை உணவுகளை அவர் தயாரித்து அசத்தினர். உலக சாதனைக்காக 13 வயது பள்ளி மாணவி நடத்திய இந்நிகழ்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.

Related Stories: