சிவகாசி டவுன் காவல்நிலைய கட்டிடப்பணி படுமந்தம்

சிவகாசி. சிவகாசி டவுன் காவல் நிலையத்திற்கு ரூ.2 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. சிவகாசி டவுன் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட  மக்கள் வசிக்கின்றனர். டவுன் காவல்நிலைய பழைய கட்டிடம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. போதிய இடவசதி இல்லாததால் இன்ஸ்பெக்டர், போலீசார் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தினர். விபத்து மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல்நிலையம் முன்பு குவிந்திருந்தது.  இதனால் காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் உட்கார இடமின்றி சாலையிலும், அருகில் உள்ள பார்க்கிலும் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

முக்கிய வழக்கில் கைது செய்யப்படும்  குற்றவாளிகளை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்து விசாரிப்பதிலும் பாதிப்பு இருந்தது. டவுன் காவல்நிலையத்தில் தினமும் புகார் மனுக்கள் அதிகளவில் வருவதால் மக்கள் கூட்டம்  அதிகம் இருக்கும். சிவகாசி டவுன் காவல்நிலைய பழைய கட்டித்தை இடித்து அகற்றி விட்டு ரூ.2 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அரசு உத்தரவிட்டது. புதிய கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் மந்த கதியிலேயே நடக்கிறது. இதனால் கட்டிடப்பணிகள் அறைகுயைாக நிற்கிறது. புதிய கட்டிடத்தை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: