சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்: இரைத்தேடி குவியும் பறவைகள்

மேல்மலையனூர்,: மேல்மலையனூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால்,விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கிய காரணத்தினால் விவசாயிகள் இவ்வருட சம்பா சாகுபடி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை நீரில் மூழ்கி அழுகியது. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை அடைந்தனர்.  விவசாய நிலங்களில் அதிகளவு நிரம்பிய தண்ணீர் தற்போது வடிந்து வருவதால் அடுத்த போக விவசாய பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

டிராக்டர் கொண்டு உழவு பணியை செய்யும் போது அப்பகுதியில் கொக்குகள் எள்ளிட்ட பறவைகள் அதிகளவு வந்து விவசாய நிலங்களிலுள்ள புழுக்களை திண்பதற்காக கூட்டம், கூட்டமாக குவிந்து வருகிறது.

Related Stories: