சென்னை: காந்தியடிகளின் 74வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையின்கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, பென்ஜமின், நிலோபர் கபீல், பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன், வளர்மதி தலைமை செயலாளர் சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.நடராஜ், வி.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
