திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மாஜி அமைச்சர், 2 எம்எல்ஏ பாஜ.வுக்கு தாவல்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்வர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை பாஜ சிதைத்து வருகிறது. இம்மாநிலத்தில் பலம் வாய்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சுவேந்து அதிகாரி, முதன் முதலில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜ.வில் இணைந்தார்.  இதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் வனத்துறை அமைச்சராக இருந்த ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்தார். அவரும் திரிணாமுல்லில் இருந்து மம்தாவால் நீக்கப்பட்ட எம்எல்ஏ.க்களான பிரபீர் கோஷல், பைஷாலி டால்மியா, முன்னாள் மேயர் ரதின் சக்ரவர்த்தி ஆகியோரும் நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றனர். அங்கு, பாஜ தலைவர்களை சந்தித்து, அக்கட்சியில் முறைப்படி இணைந்தனர். திரிணாமுல் காங்கிரசில் இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: