ஐரோப்பா, ஹாங்காங்கில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வந்தது

சென்னை:  ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஹாங்காங்கிலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் 19 கருவிகள் 2 சரக்கு விமானங்களில் சென்னை வந்தன.  இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை பெருமளவில் பரவி வருகிறது. இதையடுத்து நோயாளிகளுக்கு தேவையான  ஆக்சிஜன் கிடைப்பதில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதையடுத்து மருத்துவமனைகள், தனியார் அமைப்புகள் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை அதிகமாக இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டன. அதைப்போல் ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு சென்னை வந்த 2 சரக்கு விமானங்களில் 19 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை விமான நிலைய சரக்கக பகுதியில் வந்து இறங்கின. சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த கருவிகள் அடங்கிய பார்சல்களுக்கு முன்னுரிமை வழங்கி, உடனடியாக சுங்கச்சோதனைகள் முடித்து 30 நிமிடங்களில் டெலிவரி கொடுத்தனர்….

The post ஐரோப்பா, ஹாங்காங்கில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வந்தது appeared first on Dinakaran.

Related Stories: